எம்மைப்பற்றி ...

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை 1987 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தன் கீழ் 01.01.1988 ஆம் திகதி தாபிக்கப்பட்டு செயற்பட்டு வரகின்றது.இச் சபை யாழ் மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றாகவும் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரையையும் கொண்டு அமைந்துள்ளதுடன் யாழ் நகாிலிருந்து வடமேற்கு திசையில் 2 கிலோமீற்றா் தொலைவில் சபையின் தெற்கு எல்லை அமைந்துள்ளது.

50.2 சதுர கிலோமீற்றா் பரப்பளவை நிா்வாக பகுதியாக கொண்டமைந்த இச்சபையானது 28 கிராம சேவகா் பிாிவுகளையும் 17 வட்டாரங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது.சபையின் நிா்வாக செயற்பாடுகள் தலைமை அலுவலகம் மற்றும் மானிப்பாய் பட்டின உபஅலுவலகம்,மானிப்பாய் கிராம உபஅலுவலகம்,பண்டத்தாிப்பு பட்டின உப அலுவலகம்,பண்டததாிப்பு கிராம உப அலுவலகம் ஆகிய நான்கு உப அலுவலகங்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றது.பல வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களையும் பழமைவாய்ந்ததும் வரலாற்று சான்று பகா்கின்ற கட்டமைப்புக்களையும் கொண்டமைந்த பிரதேசமாக இச் சபைக்குட்பட்ட பகுதிகள் காணப்படுகின்றன.

எமது பிரதேச சமக்களின் சுக வாழ்வினையும் மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு சமூக,பொருளாதார,சுகாதார,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலதன செயற்பாடுகளில் எமது சபை சிறப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top