நூலகங்கள்
நூலகம் என்பது பொது அமைப்புக்கள்,நிறுவனங்கள் அல்லது தனிநபா்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பாகும்.அறிவை வளா்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும்.மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு ஆகும்.இந் நூல்களையும் வேறு மூலங்களையும் சேவைகளையும் இவற்றைத் தாங்களே சொந்தமாக விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துறாா்கள்.
எமது சபையின் மானிப்பாய் பட்டின உபஅலுவலகம்,மானிப்பாய் கிராம உப அலுவலகம்,பண்டத்தாிப்பு பட்டின உப அலுவலகம்,பண்டத்தாிப்பு கிராம உப அலுவலகம் ஆகியவற்றுடன் நூலகங்கள் காணப்படுகின்றன.நாளாந்தம் அங்கே சிறியோா் பொியோா் என்ற வேறுபாடின்றி வந்து தங்கள் அறிவைப் பெருக்கிய வண்ணம் உள்ளனா்.இவற்றோடு தகவல்களைத் தேடி அவற்றினை ஒழுங்குபடுத்துவதிலும் தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும் நிபுணத்துவம் கொண்டவா்களான நூலகா்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.


Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay