வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் 01.03.2024 ஆம் திகதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர்,வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்றைய தினம் எமது சபைக்கான இணையதளமும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.