வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சபை எல்லைக்குட்பட்ட மாதகல் இறங்குதுறை கடற்கரை பகுதியினை சுத்தப்படுத்தும் நிகழ்வு 14.03.2024 ஆம் திகதி காலை நடைபெற்றது. பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி.நே.செல்வகுமாரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.