திண்மக்கழிவகற்றல்

 

கழிவு என்பது அழிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் அல்லது வடிவத்தில் இனி தேவைப்படாத ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருள், பதார்த்தம்,அல்லது துணை உற்பத்திப்பொருள் என்பவையாகும். எனவே ஒரு மூலப்பொருளாக பயன்படுத்த முடியாத அல்லது ஒரு பயன்பாட்டு பெறுமதி இல்லாத பொருளை சூழல் ரீதியாக சிறந்தவொரு முறையில் அகற்றுதல் அல்லது அதன் தன்மையை மாற்றியமைத்து மனிதனுக்கும் சூழலுக்கும் உகந்ததாக மாற்றுதல் கழிவு முகாமைத்துவம் ஆகும்.

 எமது சபைக்குட்பட்ட அனைத்து  வட்டாரங்களை உள்ளடக்கி வாரத்திற்கொருமுறை உபஅலுவலகங்களுடாக  உக்கக்கூடிய  திண்மக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக விபரங்களுக்கு  swm ஐ CLICK செய்யவும்

திண்மக்கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள் , உக்கமாட்டாத கழிவுகள் என பிரித்து வழங்குவதன் மூலம் நம் பிரதேசத்தை நாமே சுத்தமாக வைத்திருக்க முடியும்

பொதுமக்களின் ஆதனங்களினுள் காணப்படும் திண்மக்கழிவுகளை  கட்டணம் செலுத்தி முழுமையாக அகற்றமுடியும் .

கட்டண விபரம்

ஒரு உழவு இயந்திர லோட் ரூபா  - 3,000.00 

“திண்மக்கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள் , உக்கமாட்டாத கழிவுகள் என பிரித்து வழங்குவதன் மூலம் நம் பிரதேசத்தை நாமே சுத்தமாக வைத்திருக்க முடியும்”

 

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top