கழிவு நீரகற்றல்
கழிவு நீரை வெளியில் விடுவதன் மூலம் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களிற்கு வாந்திபேதி மற்றும் வயிற்றோட்டம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். அவற்றிலிருந்து எம்மையும் நாம் வாழும் சூழலையும் பாதுகாக்க கழிவு நீர் முகாமைத்துவம் முக்கியமானதாகும். கழிவு நீர் முகாமைத்துவம் மூலம் பிரதேசத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேண முடியும்.
எமது சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டண அடிப்படையில் திரவக்கழிவு அகற்றப்பட்டு வருகின்றது.
தாங்கள் தங்கள் வீடுகள், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உள்ள கழிவு நீரை எமது சபையிலுள்ள திரவக்கழிவு அகற்றி (Gulley Bowser) மூலம் அகற்ற முடியும்.
எனவே தாங்கள் கழிவு நீரை மொத்தமாக அகற்றுவதற்கு கட்டணம் செலுத்தி அகற்றமுடியும் அதற்கான கட்டணமாக முதல் ஒரு உழவு இயந்திர லோட் ரூபா நான்காயிரத்தைநூறு (4500.00) அடுத்துவரும் ஒவ்வொரு லோட்- நான்காயிரம் (4000.00) வீதம் அறவிடப்படும்.
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay