ஆயுள் வேத வைத்தியம்
மற்ற மருத்துவ முறைகள் போல் அல்லாமல் ஆயுர்வேத முறையில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடல் ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது. ஆயுர்வேதத்திற்கு முக்கிய நோக்கமே தேக சம்மந்தமான நோய்களை குணமாக்ககூடியது.
அந்தவகையில் எமது சபைக்குட்பட்ட பிரதேச வாழ் மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்வை கருத்தில் கொன்டு எமது சபையின் மானிப்பாய் கிராம (ஆனைக்கோட்டை) உப அலுவலக வளாகத்தில் ஆயுள் வேத வைத்தியநிலையம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு பணிபுரியும் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் மூலம் மகத்தான சேவை ஆற்றப்பட்டு வருகின்றது. குறித்த ஆயுள் வேத வைத்திய சேவையானது திங்ககட் கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரை நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சண்டிலிப்பாய் கல்வளை பிரதேசத்தில் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகின்றது.


Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay