காணி உபபிரிவிடுகை - காணி ஒருங்கிணைப்பிற்கான அனுமதி - நிலஅளவைப்பட தனித்துண்டு அனுமதிப்பத்திரம் வழங்கல்
ஒரு காணித்துண்டு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக பிரிவடையும் செயற்பாடு-காணி உபபிரிவிடுகை எனவும், இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட காணித்துண்டுகளை ஒன்றாக இணைக்கும் செயற்பாடு-காணி ஒருங்கிணைத்தல் எனவும், நகர அபிவிருத்தி அதிகாரசபை தனது எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள காணிகளை அளவீடு செய்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிலஅளவைப்படத்திற்கு வழங்கும் அனுமதி நில அளவைப்பட தனித்துண்டு அனுமதி எனவும் அழைக்கப்படும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைகள் சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைகளால் உள்வாங்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள www.uda.gov.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்
Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay