கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான போசாக்குணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது

எமது சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு பொருட்கள் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி 2023 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஏற்பாட்டின் கீழ்  585 பயனாளிகளுக்குக்கான சத்துணவு பொருட்கள் சபையின் கீழ் உள்ள உப அலுவலகங்களில் சபையின் செயலாளர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

    

 

தேசிய வாசிப்பு மாதம்- 2023 பரிசளிப்பு விழா நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்  உப அலுவலகங்களின் பொது நூலகங்களினால் “உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது”  எனும் கருப்பொருளில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளா் திரு. சீ.சபேசன் அவா்கள் தலைமையில் 08.12.2023 அன்று மதியம் 1.30 மணியளவில் மானிப்பாய் பட்டின உப அலுவலக கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலர்  திருமதி நேசரட்ணம் செல்வகுமாரி அவா்களும்  சிறப்பு விருந்தினராக பிரதிக்கல்வி பணிப்பாளர் - கல்வி நிர்வாகம் வலயக்கல்வி அலுவலகம்  வலிகாமம் வலயம் சிவசம்பு மதியழகன் , அதிபர் யா.மெமோறியல் ஆங்கிலப்பாடசாலை அவா்களும்  கலந்து சிறப்பித்திருந்தனர் .

 

துடுப்பாட்ட தொடரில் 2 ஆம் இடத்தைப் பிடித்த வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அணி

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு உள்ளுராட்சி மன்றங்களிடையே சாவகச்சேரி நகரசபை நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை 2ஆம் இடத்தை தட்டிச்சென்றுள்ளது. அதற்கான பரிசில் வழங்கும் நிகழ்வானது  21.02.2024 சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கலந்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top