Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ” ஒருஅழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்”

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் " ஒருஅழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" எனும் தொனிப்பொருளில் மாதகல் கிழக்கு, மாதகல்துறை கடற்கரைப்பகுதி சுத்தப்படுத்தல் செயற்பாடு இன்று (23.02.2025) இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக,பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பொலிஸார், கடற்படையினர்,ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான பிரதேச அபிவிருத்தித்திட்டம் 2024-2034

 வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் நகர அபிவிருத்தி பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைக்கான பிரதேச அபிவிருத்தித்திட்டம் (2024-2034) தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக குறித்த அபிவிருத்தி திட்டம் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் மற்றும் மானிப்பாய் பட்டின உப அலுவலக நூலகம், மானிப்பாய் கிராம உப அலுவலக நூலகம், பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலக நூலகம், பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக நூலகம் ஆகியவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் இவ் அபிவிருத்தி திட்டம் தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகளை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ் அபிவிருத்தி திட்டத்தினை சபையின் முகப்புத்தகம் மற்றும் இணையத்தளம் என்பவற்றிலும் பார்வையிடலாம். தொலைபேசி :- 021 225 6647 மின்னஞ்சல் :-vswps@yahoo.com

PDF ஆக பார்வையிட கீழுள்ள இணைப்பை Click செய்யவும்

Town Centre Development at manipay (AutoRecovered) (1) 

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top