வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை Online Payment மூலம் செலுத்துவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்துங்கள்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குரிய வரி மற்றும் சேவைக்கட்டணங்களை இணையவழி நிகழ்நிலை (Online Payment) மூலம் செலுத்துவதற்கான வழிகாட்டி
அறிமுகம்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் UNDP-CDLG திட்டத்தின் கீழ் வயம்ப அபிவிருத்தி நிறுவனத்தினரின் மென்பொருளின் ஊடாக பிரதேசசபைக்குரிய ஆதனவரி மற்றும் சேவைக்கட்டணங்களை அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தும் வசதியானது 01.01.2024ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வருகைதராமல் வீட்டிலிருந்தவாறே பணத்தினை செலுத்துவதற்கு வசதியாக இணையவழி நிகழ்நிலை (Online payment) மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வசதி 22.02.2024ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இணையவழி நிகழ்நிலை (Online Payment) மூலம் கட்டணம் செலுத்தும் வழிமுறை
ஆதனவரி செலுத்துதல்.
👉 பிரதேசபைக்குட்பட்ட ஆதனவரிகளினை செலுத்தவிரும்பும் வரியிறுப்பாளர்கள் பிரதேசசபையில் பயன்படுத்தப்படும் மென்பொருளில் (CAT2020) ஆதன உரிமையாளரது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் கட்டாயம் பதிவுசெய்திருத்தல் வேண்டும்.
👉 எமது பிரதேசசபைக்குரிய இணையத்தளத்தின் (valikamamsw.ps.gov.lk) ஊடாகச் சென்று Online payment எனும் பகுதியினை அழுத்துவதனூடாக pay.cat2020.lk எனும் நிகழ்நிலை மூலம் கொடுப்பனவு செய்யும் பக்கத்தினை அடைய முடியும். அல்லது pay.cat2020.lk எனும் முகவரிக்கு செல்வதன் மூலம் நேரடியாக பக்கத்திற்குள் நுழைய முடியும்.

👉 Sign In எனும் பகுதியில் ஆதன உரிமையாளரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினையும் அவரது தொலைபேசி இலக்கத்தினையும் (முன்னரே பிரதேசசபையில் பதிவுசெய்த) நிரப்ப வேண்டும். பின்னர் Sign In எனும் பகுதியினை அழுத்துவதனூடாக பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுங்செய்தி மூலம் OTP (One Time Password) அனுப்பப்படும். கிடைக்கப் பெற்ற OTP இலக்கத்தினை எனும் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.

👉 இதில் எந்த உள்ளுராட்சி மன்றத்தில் ஆதனம் உள்ளது என்பதனை தொிவுசெய்ய வேண்டும்.

👉குறித்த தேசிய அடையாள அட்டை மூலம் பதிவுசெய்யப்பட்ட ஆதனங்கள் அனைத்தினது விபரங்களையும் Assessments எனும் பகுதியில் பார்வையிடமுடியும். எனும் பகுதியினூடாக ஆதனவரி தவிர்ந்த நகரசபைக்கு செலுத்த வேண்டிய சேவைக்கட்டணங்களை செலுத்த முடியும்.

👉 பின்னர் Assessments எனும் பகுதியில் தாங்கள் பணம் செலுத்த வேண்டிய ஆதனத்தில் Pay எனும் பகுதியினை அழுத்துவதனூடாக குறித்த ஆதனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் விரிவாக தரப்படும். அவ்விபரத்தினைப் பார்த்து தங்கள் செலுத்தவேண்டிய தொகையினை Amount எனும் பகுதியில் பதிவு செய்ய வேண்டும். இதன்போது தங்களது கட்டணம் கழிவு மற்றும் சேவைக்கட்டணம் என்பன அறியத்தரப்படும். இதன் பின்னர் Pay now என்பதனை அழுத்த வேண்டும்.

👉 பின்னர் தாங்கள் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Credit or debit Card விபரங்களினை பதிவு செய்து Pay now என்பதனை அழுத்தும் போது தங்களது Credit or debit Card இற்கு பதிவு செய்த தொலைபேசி இலக்கத்திற்கு வங்கியினால் OTP (One Time Password) அனுப்பப்படும். அந்த OTP இலக்கத்தினை பதிவு செய்ய வேண்டும்.
👉 சரியான முறையில் பணம் செலுத்தியிருந்தால் Payment Success என அறிவிப்பு கிடைக்கப்பெறும். அதேவேளையில் தொலைபேசி இலக்கத்திற்கு பணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு குறுஞ்செய்தி மூலம் கிடைக்கப்பெறும். மின்னஞ்சல் முகவரி பதிவுசெய்திருந்தால் முழுமையான பற்றுச்சீட்டு கிடைக்கப்பெறும்.

பிரதேச சபைக்கு ஆதனவரி தவிர்ந்த ஏனைய கட்டணங்களினை செலுத்துதல்
👉பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய ஆதனவரி தவிர்ந்த ஏனைய கட்டணங்கள்இ சேவைக்கட்டணங்களினை இணையவழி நிகழ்நிலை (Online Payment) மூலம் செலுத்த முடியும்.
👉பிரதேச சபைக்குரிய இணையத்தளத்தின் (valikamamsw.ps.gov.lk) ஊடாகச் சென்று Online Payment எனும் பகுதியினை அழுத்துவதனூடாக pay.cat2020.lk எனும் நிகழ்நிலை மூலம் கொடுப்பனவு செய்யும் பக்கத்தினை அடைய முடியும். அல்லது pay.cat2020.lkஎனும் முகவரிக்கு செல்வதன் மூலம் நேரடியாக பக்கத்திற்குள் நுழைய முடியும்.
👉ஆதனவரி செலுத்தும் ஆதன உரிமையாளர் எனின், தாங்கள் பதிவு செய்த தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தினை பகுதியினூடாக உட்செலுத்தி Other Payment எனும் பகுதியினூடாக வேறு கட்டணங்களை செலுத்த முடியும்.
👉ஆதனவரி செலுத்தும் ஆதன உரிமையாளர் இல்லையெனின், Sign up எனும் பகுதியில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினையும் தொலைபேசி இலக்கத்தினையும் பிற தகவலினையும் நிரப்ப வேண்டும். பின்னர் Sign Up எனும் பகுதியினை அழுத்துவதனூடாக பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுங்செய்தி மூலம் OTP (One Time Password) அனுப்பப்படும். கிடைக்கப் பெற்ற OTP இலக்கத்தினை எனும் பகுதியில் பதிவு செய்ய வேண்டும். இதில் எந்த உள்ளுராட்சி மன்றத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்பதனை தொிவுசெய்ய வேண்டும்.

👉Other payment எனும் பகுதியில் காட்டப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூரணப்படுத்தவேண்டும்.
- * Select province :- Northern Province
* Select Local Authority :- valikamam Southwest Pradeshiya sabha
* Select Office :- Manipay
* Select service : - தாங்கள் பணம் செலுத்தும் சேவையைக் குறிப்பிடவும். Eg: Trade Tax
* Reference No :- தாங்கள் பணம் செலுத்துவதற்கு நகரசபையினால் கடித இலக்கம் அல்லது வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டால் தெளிவாக குறிப்பிடவும்.
* Request Note :- தாங்கள் பணம் செலுத்தும் சேவை தொடர்பிலான விபரங்களினை தெளிவாக குறிப்பிடவும். உதாரணம்- கடை இல, கடை பெயர், எந்த ஆண்டுக்கான கட்டணம்
Amount :- செலுத்த வேண்டிய தொகையினை சரியாக குறிப்பிடவும்.

பணம் செலுத்தியமை தொடர்பான தகவல்களை பார்வையிட முடியும்.
👉 pay.cat2020.lk எனும் முகவரிக்குள் நுழைந்த பின்னர் தங்களது விபரங்களை இடப்பக்க மேல்மூலையில் காணப்படும் எனும் குறியீட்டை அழுத்துவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
Home :- உங்களது ஆதனவரி விபரங்கள் தென்படும்.
Profile :- தங்களது விபரங்கள் தென்படும்.

👉 History: தங்களால் செலுத்தப்பட்ட கட்டணங்களின் விபரங்கள் தென்படும்.
